Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

  • SHARE
  • FOLLOW
Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Oil Bath Health Benefits: எண்ணெய் குளியல் என்பது அபியங்க ஸ்னானா என அழைக்கப்படுகிறது. இதில் அபியங்க என்பது எண்ணெயைக் கொண்டு சுத்தம் செய்தல் மற்றும் ஸ்னானா என்பது குளியலைக் குறிக்கும் சொற்களாகும். இயற்கையான முறையில் சருமத்தை ஈரப்பதாமாக்கவும், சருமத்திற்கு ஊட்டமளிக்கவும் எண்ணெய் குளியல் உதவுகிறது. எண்ணெய் குளியல் உடலுக்கு இன்னும் பிற நன்மைகளைத் தருகிறது. இப்போது எண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகளையும், எந்த எண்ணெயில் குளியல் செய்வது பலன்களைத் தரும் என்பதையும் காண்போம்.

எண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடலைத் தளர்வடையச் செய்ய உதவும் எண்ணெய் குளியல் உடலின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவுகிறது.

அழற்சி எதிர்ப்புப் பண்புகள்

பல்வேறு தாவரங்கள் மற்றும் மரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயையே எண்ணெய் குளியலுக்குப் பயன்படுத்துகிறோம். இது உடலின் தசைகளைத் தளர்த்தி உடலுக்குக் குளிர்ச்சியான விளைவைத் தருகின்றன. உடலில் ஏற்படும் வலிகளைக் குறைத்து, வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன. எண்ணெய் குளியலைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வாதம் நோய், உடல் வலி போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்