Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

  • SHARE
  • FOLLOW
Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நேரமின்மை காரணமாக மன அழுத்தம், பதட்டம் போன்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம். இதன் காரணமாக உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தவிர்க்க, நாம் அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் நாம் இரவில் தூங்குவதற்கு முன் சில விஷயங்களைச் செய்வதன் மூலம் மன அழுத்தம், பதட்டம் போன்ற உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடியதில் இருந்து விடுபட முடியும்.

தினமும் தூங்கும் முன் செய்ய வேண்டியவை

உறக்க நேரத்தைத் தேர்ந்தெடுப்பது

எப்போதும் தூங்கும் போது சரியான உறக்க நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் படி, உறங்க செல்லும் அரை மணி நேரத்திற்கு முன் மனதை அமைதியாக வைத்து உறங்க செல்ல வேண்டும். இது இரவு முழுவதும் நல்ல உறக்கத்தைத் தரக்கூடியதாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்திலிருந்து குணமடைவதற்கான 7 அறிகுறிகள்

மொபைல் பயன்பாட்டைத் தவிர்ப்பது

உறங்கும் முன் தொலைக்காட்சி பார்த்தல், மொபைல் பயன்படுத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இந்த மின்னணு சாதனங்கள் மூளையை அமைதியிழக்கச் செய்யும். மேலும், அளவுக்கு அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பது உறக்கத்தைக் கெடுப்பதாக அமைகிறது. எனவே, தூங்குவதற்கு முன்னதாக மொபைல் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்