Kashmiri Saffron Benefits: காஷ்மீர் குங்குமப்பூவின் மகத்தான நன்மைகள்!

  • SHARE
  • FOLLOW
Kashmiri Saffron Benefits: காஷ்மீர் குங்குமப்பூவின் மகத்தான நன்மைகள்!

Kashmiri Saffron Health Benefits: காஷ்மீர் குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகளை அளவிட முடியாது. இதன் எண்ணிலடங்கா நன்மைகளை பெற, இதனை உங்கள் வழக்கத்தில் இணைக்க வேண்டும். இது அழகியல் துறையில் சிறந்து திகழ்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இது நரம்பு மண்டம், விந்தணு எண்ணிக்கை, செரிமான அமைப்பு ஆகியவற்றிலும் சிறந்து திகழ்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் இது மாதவிடாய் வலி, ஆஸ்துமா போன்ற பல்வேறு ஒவ்வாமை நிலைகளையும் தடுக்க இது உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? இதன் முழு விவரங்களையும் அறிய பதிவை மேலும் படிக்கவும். 

அழகு பராமரிப்பு

அழகு சாதனப் பொருட்களில், காஷ்மீர் குங்குமப்பூ, நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முகப்பரு, சரும வெடிப்பு, தோல் அழற்சி, சுருக்கம் போன்றவற்றை தடுத்து, சருமத்தை பளபளப்பாக்கும். மேலும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்களையும் இது போக்கும்.

இதையும் படிங்க: Leafy Vegetables Benefits: சர்க்கரை நோயாளிகளுக்கு இலை காய்கறி எவ்வளவு நன்மை தெரியுமா?

சிறுநீரக கற்களை நீக்கும்

தேனுடன் காஷ்மீர் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் நீங்கும். சிறுநீரக தொற்றுள்ளவர்கள், குங்குமப்பூ கலந்த தேநீரை குடிக்கலாம். இதனால் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். 

விந்தணுக்களை அதிகரிக்கும்

ஆண் இனப்பெருக்க அமைப்பை ஆதரிக்கவும், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும், விறைப்புத்தன்மையை நீக்கவும் காஷ்மீர் குங்குமப்பூ உதவுகிறது. 

செரிமானத்தை மேம்படுத்தும்

காஷ்மீர் குங்குமப்பூ அஜீரண கோளாறுகளை தடுக்கிறது. மேலும் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் அமிலத்தன்மையை குறைக்கிறது. பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதனை உட்கொண்டாள், அவர்களுக்கு பசி அதிகரிக்கும். 

Image Source: Freepik

அடுத்ததை படிக்கவும்

Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்