Baby Crying Reasons: குழந்தை நீண்ட நேரம் அழுகிறதா? அதற்கு இதெல்லாம் தான் காரணம்

  • SHARE
  • FOLLOW
Baby Crying Reasons: குழந்தை நீண்ட நேரம் அழுகிறதா? அதற்கு இதெல்லாம் தான் காரணம்

Baby Continuously Crying Reason: குழந்தை அழுவது சாதாரணமானது என்றாலும், நீண்ட நேரம் குழந்தை அழுவதற்கு சில காரணங்கள் இருக்கலாம் அதன் படி, அரவணைப்பு, அன்பு, பாதுகாப்பு மற்றும் ஆறுதலுக்காக குழந்தை அழுகலாம். குழந்தை அழுவதற்கு இன்னும் சில காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

குழந்தை நீண்ட நேரம் அழுவதற்கான காரணங்கள்

பொதுவாக குழந்தைகள் அழும் போது அவர்களுக்கருகில் போன உடனேயே அழுகையை நிறுத்தி விடும். எனினும், அவர்களைத் தூக்கி வைத்துக் கொண்ட பிறகும் அழுகையை நிறுத்தவில்லையெனில், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் காண்போம்.

டயப்பர் மாற்ற

சாதாரணமாகவே, ஈரமான டயப்பர் அணிந்திருப்பது எரிச்சலை ஏற்படுத்தும். இதில் குழந்தைகள் துர்நாற்றம் அல்லது கனமான டயப்பரை அணியும் போது அழுகலாம். இந்த சூழ்நிலைகளில் குழந்தைக்கு உடனடியாக டயப்பரை மாற்ற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Stop Baby Hiccups: பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்த இப்படி முயற்சி செஞ்சி பாருங்க!

பசி

குழந்தைகளை எடுக்கும் போது கன்னத்தில் மோதுவதற்கு பதில் மார்பகங்களை நோக்கி சாய்வது, பசியின் அறிகுறிகளை உணர்த்துகிறது. பசியின் அறிகுறிகளைக் கண்டபின், உடனடியாக குழந்தைக்கு உணவளிப்பது குழந்தையின் நீண்ட நேர அழுகையைச் சமாளிக்கலாம்.

குழந்தை சோர்வாக இருக்கும் போது

பொதுவாக குழந்தைகள் தூங்கும் போது சிரமப்படுவர். குறிப்பாக அதிக சோர்வாக இருக்கும் போது அதை வெளிக்கொணரமுடியாமல் அழுகுவர். குழந்தை சோர்வுடன் இருக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் குழந்தைகளுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தலாம். இதற்கு சூடான குளியல் உதவும். மேலும் குழந்தைகளை அமைதியான அறையில் ஓய்வெடுக்க வைப்பது நல்லது.

நோய் அறிகுறியாக

குழந்தை இடைவிடாது அழுவது சில நோய் அறிகுறிகளாக இருக்கலாம். உடல் வெப்பநிலை அதிகமாகும் போது அதாவது 38 டிகிரி செல்சியஸூக்கு மேல் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Dancer Hand Breastfeeding: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கலா? இந்த நிலையில் கொடுங்க

வயிற்று வலி

குழந்தை சாப்பிட்ட பிறகு உடனேயே படுக்க வைத்தல் கூடாது. இது குழந்தைக்கு வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதன் காரணமாகவும் குழந்தை நீண்ட நேரம் அழும். குழந்தை சாப்பிட்ட பின், குழந்தையின் முதுகில் மெதுவாக தேய்ப்பது, வயிற்றில் மசாஜ் செய்வது போன்றவற்றின் மூலம் அழுகையை நிறுத்தலாம். எனினும், பரிந்துரைக்கப்பட்ட கோலிக் சிகிச்சைகளுக்கு மருத்துவரை அணுகுவது நல்லது.

குழந்தையை அரவணைத்தல்

குழந்தைகளை நிறைய கட்டிப்பிடித்தல், உடல் தொடர்பு போன்றவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு கூடுதல் கவனத்தையும், அரவணைப்பையும் அளிப்பது அழுகையைக் கையாள்வதற்கு சிறந்த வழியாகும். மேலும் புதிதாகப் பிறந்த குழந்தையை உங்கள் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவகை குழந்தைகளின் மீது அதிக கவனத்தைச் செலுத்துவதும், அதிகமாக பார்ப்பதும் நன்மை தரும்.

அடுத்ததை படிக்கவும்

Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்